யாழில் ஆட்டோவை நசுக்கிய டிப்பர்! ஒருவர் பலி! 2 பேர் படுகாயம்! கால்கள் முறிந்து தொங்கின!
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புத்தூர் வீதியில் மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் , முச்சக்கர வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்து கால்கள் முறிந்த நிலையில் , மீட்கப்பட்டு , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த நிலையில் , ஏனைய இருவருக்கும் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

