புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையில் மரணதண்டனை வழங்கப்பட்ட கைதி சிறைச்சாலைக்குள் பெண் வைத்தியர் மீது அத்துமீறினான்!
இது சமூகவலைத்தளத்தில் வந்த பதிவாகும்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிலிருக்கும் கைதியொருவர் பெண் மருத்துவரொருவரைத் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லேகலை தும்பறைச் சிறைச்சாலை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குறித்த கைதி அவரைப் பரிசோதித்துக் கொண்டிருந்த பெண் மருத்துவரைத் திடீரெனத் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். எனினும், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளும், மருத்துவ ஊழியர்களும் விரைந்து செயற்பட்டுக் கைதியைக் கட்டுப்படுத்தினர். இதனால், மருத்துவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பாகப் பல்லேகலை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, ஏற்கனவே நாட்டை அதிரவைத்த ‘குரூப் ரேப்’ மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முக்கிய குற்றவாளிகளில் ஒருவரே இவ்வாறு மீண்டும் அநாகரிகமாக நடந்து கொண்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிறைகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.

