Home புதினங்களின் சங்கமம் போதைப்பொருள் கடத்தி சம்பாதித்த சு 9 கோடி! 2 வங்கிகளில் வைப்புச் செய்திருந்த 31 வயது...

போதைப்பொருள் கடத்தி சம்பாதித்த சு 9 கோடி! 2 வங்கிகளில் வைப்புச் செய்திருந்த 31 வயது கடத்தல்காரி பிடிபட்டது எப்படி?

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 9 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரத்து 939 ரூபாய் பணத்தை இரண்டு வங்கிகளில் வைப்புச் செய்திருந்த போதைப்பொருள் கடத்தல்காரி ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடைய ஒரு கணக்கில் 7,37,62,939.95 ரூபாயும், மற்றொரு கணக்கில் 20,000,000 ரூபாயும் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.