இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் ரயில்கள் ஓடது!! ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்
ரயில்வே தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
வேதன முரண்பாடு பிரச்சினைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இன்று நள்ளிரவு முதல் தபால் ரயில்களும் இயக்கப்படாது என அந்த சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பணிபகிஷ்கரிப்பிற்கு ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், ரயில் கட்டுப்பாட்டாளர்கள், ரயில் சாரதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆதரவளித்துள்ளனர்.
அரச சேவையில் வேதன அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், ரயில் ஊழியர்களின் வேதன முரண்பாடுகளுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

