புதினங்களின் சங்கமம்

திடீரென விழுந்து இறந்த கடற்படைச் சிப்பாய்!! அதிர்ச்சிப் புகைப்படங்கள் (Photos)

தம்புள்ளை பொது கழிவறைக்கு அருகில் விழுந்து கிடந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த போது உயிரிழந்ததாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சிப்பாய், சுகவீனம் காரணமாக தம்புள்ளை பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறைக்கு எதிரில் இன்று விழுந்து கிடந்துள்ளார்.

சுமார் 30 நிமிடங்களுக்கு பின் அவரை சிலர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். கொஸ்கம, ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த கலேவெல பல்லேபொல பிரதேசத்தை சேர்ந்த துஷார குமார ஜயசிங்க என்ற இராணுவச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது பயண பொதியை தம்புள்ளை பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறைக்கு வெளியில் வைத்து விட்டு, உள்ளே சென்று விட்டு வெளியில் வந்த இராணுவச் சிப்பாய், கட்டணம் அறவிடும் நபரிடம் கட்டணத்தை செலுத்தும் போது திடீரென கீழே விழுந்ததாக கட்டணம் அறிவிடும் நபர் கூறியுள்ளார்.

அவர் இராணுவச் சிப்பாய் என்பதை அறிந்த பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் 30 நிமிடங்கள் வரை அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல கடுமையாக முயற்சித்துள்ளனர். அந்த இடத்திற்கு அருகில் இராணுவத்தினர் சிலரும் இருந்துள்ளனர். பலர் அந்த இடத்திற்கு செல்ல தயங்கிய நிலையில், இளைஞர்களும், யுவதிகள் சிலரும் இராணுவச் சிப்பாய்க்கு முதலுதவி செய்துள்ளனர்.

இதனையடுத்து இரண்டு இளைஞர்கள் அருகில் இருந்த முச்சக்கர வண்டியில் தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் இராணுவச் சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

 

இன்று இலங்கையில் மூச்சுக்கஸ்டத்துடன் அவதிப்பட்ட இராணுவ உத்தியோகத்தருக்கு உதவி செய்ய மக்கள் அஞ்சியதால் ஒரு உயிர் பறிக்கப்பட்டுள்ளது!!!

இன்று மதியம் தம்புள்ளை பஸ்தரிப்பிட நிலையத்தில் இராணுவ உத்தியோகத்தர்
துஷாரா குமார ஜெயசிங்க
மூச்சுக்கஸ்டத்துடன் அரைமணித்தியாலயமாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கின்றார்.

கொரோனா தொற்று நோய் அச்சத்தில் நெருங்க பலர் பயத்தில் தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்துள்ள போது .இரு பெண்கள் தாமாக முன்வந்து உரிய இராணுவ வீரருக்கு அருகில் சென்று அவர் சுவாசத்தினை பார்த்து உடனே முச்சக்ரவண்டியிற்கு அறிவித்து அதனை தொடர்ந்து வைத்தியசாலை கொண்டு சென்று அங்கு இராணுவ வீரர் மரணித்துள்ளார்.

அப்பெண்கள் அவ் இராணுவ உறுப்பினருக்கு அருகில் நெருங்கி பார்க்கும் வரை பஸ்தரிப்பிட நிலையத்தில் நின்ற ஒருவரும் செல்ல வில்லை .இராணுவ வீரர் மரணித்த பின் திரண்டவர்கள் வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டம் சுவாசம் குறைந்து அவதிப்படும் போதே தம்புள்ள பஸ்தரிப்பிட நிலையத்திலிருந்து 500m தூரத்திலுள்ள வைத்தியசாலை கொண்டு செல்ல முயற்சி செய்ய துரிதமாக செயற்படாமையால் இலங்கையில் மனிதாபிமானம் எங்கே உள்ளதை இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி வெளிக்காட்டுகின்றது.

Image may contain: one or more people, people sitting and shoesImage may contain: one or more people and people standingImage may contain: one or more people and people sitting