இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்
முல்லைத்தீவு துணுக்காய் தேறாங்கண்டல் பாடசாலையில் மல்லாவி பொலிஸ் நிலைய வாகனம் [jeep] பாடசாலை அதிபரின் அனுமதியின்றி பாடசாலை வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலைக்கு முன் வீட்டில் வசிக்கும் நபர் ஏன் பாடசாலைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என விசாரிக்க சென்றவரை தகாத முறையில் பேசி நீ யார் அதனை கேட்பதற்கு என அவருடன் முறன்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் அவ்விடத்திற்கு மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வந்து அவ்வாறு கேட்பதற்கு உமக்கு உரிமை இல்லை எனவும் அரச பாடசாலைக்குள் செல்வதற்குள் அனுமதி தேவையில்லை என்றும் நாங்கள் பொலிஸ் என்று தெரியாதா என்று கூறி அவரை பொலிஸ் வாகனத்தில் மேலாடை இன்றி பலவந்தமாக ஏற்றி சென்று பின்னர் விடுவிக்கப்பட்டார் ஏற்கனவே இப்பாடசாலையில் ஆசிரியரை தாக்கிய சம்பவம் ஒன்றும் பொலிஸில் பதிவாகியுள்ள நிலையில் இவ்வாறு பொலிஸ் வாகனம் நின்ற போது கேட்டது தவறா? இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நடக்காமல் இருப்பதற்கு பாடசாலை அதிபர் வலையக்கல்வி பணிப்பாளர் அரசாங்க அதிபர் ஆளுனர் கல்வி அமைச்சு போன்றவர்கள் பாடசாலை சமூகம் மீது அக்கரை கொண்டவர்களை இவ்வாறு அவமதிப்பதை தட்டிக் கேட்பார்களா குறிப்பாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த உத்தியோகத்தர் ஒருவரால் யோகபுரம் பாடசாலைக்குள் மது போதையில் நுழைந்து மாணவிகள் மீது அவதூறாக நடந்துக் கொண்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முற்படுத்திய வழக்கொன்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது





