Home புதினங்களின் சங்கமம் தாயின் கள்ளக் காதலனால் 3 வயதுக் குழந்தை அடித்துக் கொலை!

தாயின் கள்ளக் காதலனால் 3 வயதுக் குழந்தை அடித்துக் கொலை!

ஹோமாகம, சமகி மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

தாயின் கள்ளக்காதலன் ஒருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் தற்போது குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்மை ‘தந்தை’ என்று அழைக்குமாறு வற்புறுத்தி குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இச்சிறுமி மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.