சற்று முன் முல்லைத்தீவில் வீதியில் உலரவிடப்பட்ட நெல்லால் விபத்து! ஒருவர் படுகாயம்!
சற்று முன் முல்லைத்தீவு பிரதான வீதியில் சற்று முன் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர். வீதியில் நெல்லு உலர விடப்பட்ட நிலையில் தடுமாறிய நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கொஞ்ச நாட்கள் இந்த நெல் உலர விடுவதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன என்பது பற்றி நிறைய பேர் பதிவு செய்து இருந்தார்கள்.
அதற்கு மாற்று வழியாக ஏதேனும் செய்து விபத்துகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்றவும் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்கவும் அரசாங்கம் வழி செய்ய வேண்டும்.



