புதினங்களின் சங்கமம்

வடக்கு ஆளுநருக்கா வடக்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கா அதிகாரம் அதிகம்! யாழி ஈ.பி.டி.பி ஆதரவு அதிபர் உல்லாசம்!

வடமராட்சி குடத்தனை கரையூர் அ.மி.த.க பாடசாலையின் அதிபராகவுள்ள மு.கதிர்காமலிங்கம் 30 வருடகாலத்திற்கும் அதிகமாக குறித்த பாடசாலையில் அதிபராக இருந்து கொண்டு ஏராளமான ஊழல்களை புரிந்து வருகின்றார். இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் முன்னைய ஆட்சிக் காலத்தில் பலதடவைகள் ஆர்ப்பாட்டம் செய்தும் ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் பாடசாலையில் தொடர்ச்சியாக அதிபராகக் கடமையாற்றி வந்துள்ளார். மாணவர்களுக்கு கொடுக்கும் உணவுக்கான செலவுகளில் பாரியளவு மோசடிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பாகவும் அதிபரின் ஏனைய சில்மிசங்கள் மற்றும் ஊழல், முறைகேடுகள் தொடர்பாகவும் ஆசிரியர்கள் முரண்பட்டால் அவர்களை தனக்கு இரு்ககும் செல்வாக்கு காரணமாக  இடம்மாற்றி வந்துள்ளார்.

அதிபரின் ஊழல் மற்றும் துர்நடத்தைகள் தொடர்பாக தற்போதைய வடக்கு ஆளுநருக்கு தெரியப்படுத்திய போது அதிபரை உடனடியாக கல்விப்பணிமனையில் இணைக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டும் இதுவரை அவர் பாடசாலையை விட்டு விலகவில்லை எனத் தெரியவருகின்றது.

தற்போது NPP ஆசிரிய சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரை குறித்த அதிபர் ஏதோ ஒரு விதத்தில் மடக்கி அவரைக் கொண்டு ஆளுநரை சாந்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனாலும் ஆளுநர் தொடர்பாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என கல்வி அமைச்சு மற்றும் கல்வி திணைக்களம் கூறியுள்ளதுடன் ஆளுநரின் உத்தரவை குப்பைக் கூடைக்குள் போட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அதிபரை துாய்மைப்படுத்து நடவடிக்கையில் வடக்கு கல்வி உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செயற்பட்டுவருகின்றார்களாம். அதிபரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளார்கள். அந்தக் குழு, பாடசாலை விடுமுறை விட்ட பின் அதிபருக்கு  தாம் பாடசாலைக்கு வரப் போகின்றோம் என தெரியப்பட்டுத்தியுள்ளார்கள். இதன் காரணமாக அதிபரின் ஏற்பாட்டில் அதிபருக்கு சார்பான சில குடிகாரர்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் எனும் பெயரில் சிலரை ஆயத்தப்படுத்தி அதிபர் நல்லவர் என விசாரணைக் குழு வந்த போது அதிபரின் துாண்டுதலில் தெரிவித்துள்ளார்களாம்.

குறித்த விசாரணைக் குழு எப்போது வந்தது எனத் தெரியாது அதிபரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் கடும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

கல்வி அமைச்சின் செயலாளர் பத்து லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார் என NPP கட்சியின் வவுனியா எம்.பி தெரிவித்தும் தற்போதைய மீன்பிடி அமைச்சரின் வால்பிடியாக மாறியுள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை எதுவும் செய்ய முடியாதுள்ளது வடக்கின் கல்விக்கே பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.