ரயிலில் மோதுண்டு காட்டு யானை உயிரிழப்பு! குருநாகலில் சம்பவம்.
நாட்டில் காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்துள்ள நிலையில் நேற்று முன் தினம் குருநாகல், கல்கமுவ பகுதியில் உள்ள ரயில் பாதையில் ரயிலுடன் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை (27) இரவு 08.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. குறித்த விபத்துக் காரணமாக நேற்றைய தினம் இரவு ரயில் சேவை தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

