புதினங்களின் சங்கமம்

யாழில் மீற்றர் வட்டிக்கு காசு வாங்கி போதைப் பொருள் பாவித்தானா? பப்ஜி கேம் விளையாடினானா? சாவதற்கு முயன்ற வெங்காயம் யார்?

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய வெங்காயம் ஒன்று பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றதாக அவனது உறவுகள் கூறுகின்றார்கள்.

குறித்த வெங்காயம் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில், காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த வெங்காயம் ஒன்று  கடந்த சில வருடங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளது. அந்த விளையாட்டில் பணம் கட்டுவதற்காக மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி , அதனை செலுத்தி விளையாடி வந்துள்ளது.

இந்நிலையில் கடன் தொகை அதிகரித்த போது , கடன் கொடுத்தவர்கள், வெங்காயத்தின் வீட்டாருக்கு பணம் கேட்டு நெருக்கடியை கொடுத்த வேளை வீட்டார் தமக்கு சொந்தமான காணி ஒன்றினை விற்று கடனை அடைத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போதும் வெங்காயம் பப்ஜி விளையாட்டுக்காக பெருந்தொகை பணத்தினை மீட்டர் வட்டிக்கு வாங்கி செலவழித்துள்ள நிலையில் , கடன் கொடுத்தவர்கள் வீட்டாருக்கு நெருக்கடி கொடுத்த போதிலும் , வீட்டார் இம்முறை கடனை செலுத்த மறுத்ததால் , இளைஞன் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

உயிர்மாய்க்க முயன்ற வெங்காயம் வீட்டார் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் வெங்காயம் சிகிச்சை பெற்று வருகின்றது.

ஆனாலும் குறித்த வெங்காயம் போதைப்பொருளுக்கு அடிமையானது என்று்ம் தற்போது போதைப்பொருள் விற்கும் காவாலிகள் பொலிசாரின் கிடுக்குப் பிடியில் அகப்பட்டு வரும் நிலையில் குறித்த வெங்காயத்திற்கு போதைப் பொருள் கிடைக்காத காரணத்தால் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கருத்துத் தெரிவித்துள்ளார்க்ள.