யாழில் ரயிலிலிருந்து தவறி விழுந்து சுபாசினி் பலி!
சாவகச்சேரி பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து உயிரிழந்த துயரச் சம்பவம் இன்று (16) வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதம் சாவகச்சேரி – சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் புகையிரதத்தில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார். இருப்பினும் அவர் இருந்த பெட்டியின் வாயில் ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத காரணத்தால் வேறு பெட்டி ஊடாக சென்று இறங்க முற்பட்ட வேளையில் புகையிரதமும் நகர்ந்ததால் பெண் கீழே விழுந்து படுகாயமடைந்திருந்தார்.
படுகாயமடைந்த பெண்ணை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதில் சாவகச்சேரி கோவிற்குடியிருப்பைச் சேர்ந்த 53 வயதான சு.சுபாசினி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

