யாழ் போதனா வைத்தியசாலையில் வாசலை மறித்து நிற்கும் ஆட்டோ!!
யாழ் போதனாவைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குறித்த ஆட்டோ ஒன்று பல தடவைகள் வைத்தியசாலை வாசலை மறித்து நிற்பதாக நோயாளர்ளைப் பராமரிப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். வைத்தியசாலைக்குள் செயற்படும் வர்த்தகப் பொருட்களை விற்கு்ம் கடை ஒன்றுக்குச் சொந்தமான ஆட்டோவோ இவ்வாறான தடங்கலை ஏற்படுத்தி வருவதாக தெரியவருகின்றது. யாழ் போதனாவைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வைத்தியசாலைக்குள் நோயாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை காட்சிப்படுத்துவதில் உள்ள கவனத்தை நோயாளர்களுக்கு சிரமங்களைக் ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களிடம் காட்டுவதில்லை என பலராலும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

