Home புதினங்களின் சங்கமம் சவுதியில் தமிழ் யுவதிக்கு நடந்தது என்ன?

சவுதியில் தமிழ் யுவதிக்கு நடந்தது என்ன?

சவுதியில் காணாமல் போன தமிழ் செவிலியர் விவகாரம் – புதிய தகவல்

விடுமுறை முடிந்து சவுதி திரும்பிய 32 வயது தமிழ் செவிலியர் பிலோமினா, ஜித்தா விமான நிலையத்தில் காணாமல் போனதாக கணவர் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய தூதரகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. சவுதியில் தடை செய்யப்பட்ட மருந்துகளை எடுத்து வந்ததற்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரை விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனராம்.

ரியாத் கிங் பஹத் மருத்துவமனையில் பணியாற்றி வரும் பிலோமினா, வயநாடு ஐயன்கூலி பகுதியில் வசிக்கும் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஜித்தாவை சேர்ந்த கேரள சமூக ஆர்வலர் சுபேர் காரத்தோடு, இன்று வழக்கறிஞருடன் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். மேலும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தடை செய்யப்பட்ட மருந்துகளை சவுதிக்கு எடுத்து வர வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments