Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ராசு சாரத்தை கிழித்து துாக்கில் தொங்கி மரணம்!!

கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ராசு சாரத்தை கிழித்து துாக்கில் தொங்கி மரணம்!!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் 25.07.2025 குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலைய விசாரணைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம் 12.20 மணி அளவில் தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு எனும் 66 வயதுடைய கிளிநொச்சி புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.