வெடிக்காத நிலையில் செல் வெடிகுண்டு மீட்பு..!
யாழ். வடமராட்சி கிழக்கு, வத்திராயன் முருகன் கோயில் அருகாமையில் இன்றைய தினம் (18) பிற்பகல் 5 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் வீட்டு வேலைக்காக வேலையாட்கள் அத்திவாரம் வெட்டிக் கொண்டு இருந்துள்ளனர். மதியம் 12:30 மணியளவில் வெட்டிய அத்திவாரப் பகுதியில் வெடிக்காத நிலையில் ஒருவகை வெடிகுண்டை அவதானித்த வேலையாட்கள் வேலையினை அவ்வாறே இடை நிறுத்தி விட்டு மருதங்கேணி பொலிஸாருக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளனர்.
இதன்பின் பிற்பகல் 5 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிஸார் குறித்த வெடிகுண்டை மீட்டுச் சென்றுள்ளனர்.

