புதினங்களின் சங்கமம்

மாத்தறையில் பயங்கரம்! இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை!!

மாத்தறையில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
தேவுந்தர ஸ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள சிங்கசன சாலையில் நேற்று இரவு 11.45 மணியளவில், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேனில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், T-56 மற்றும் இரண்டு 9 மீல்லி மீற்றர் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்து வீடு திருப்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
வேனில் வந்த குழுபினர் விபத்தை ஏற்படுத்திய பின்னர் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் ஒரு பக்க வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு வேன் தீ வைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்
இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் தெவிநுவர பிரதேசத்தில் வசிக்கும் 28 மற்றும் 29 வயதுடைய யோமேஷ் நதீஷான் மற்றும் பசிந்து தாருக என்ற இரண்டு இளைஞர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் அல்லது துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
May be an image of 1 person, blonde hair, beard and smiling
May be an image of 1 person, beard and temple
May be an image of 3 peopleMay be an image of ‎3 people and ‎text that says "‎OLICE د=‎"‎‎May be an image of 4 people and crowdMay be an image of 6 people, van, ambulance and text that says "POLIC"