புதினங்களின் சங்கமம்

கம்பஸ் பேராசிரியர்களுக்கு 5 லட்சம் ரூபா சம்பளம் காணாதாம்!! போராட்டம் வெடிக்கவுள்ளதாம்!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்....

ஒரு பேராசிரியர் 5 லட்சம் ரூபாய்களை சம்பளமாக எடுக்கிறார். ஆனால் கடனில் இருக்கிறார். காரணம் சமூகத்தில் அவரது மதிப்பை மெருகேற்ற எடுக்கப்படும் ஆடம்பர நடவடிக்கைகள் தான். 5 லட்சம் சம்பளம் பெறும் ஒருவருக்கே இவளவு பிரச்சனை என்றால் அதே பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு, 1st class எடுத்துவிட்டு தனது தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல், வெளிநாட்டுக்கும் வந்துவிட பண வசதி இல்லாமல் ஆசிரியர்களாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் பலர் இருக்கிறார்கள். அவர்களது வருமானம் ஒரு 80 ஆயிரம் ரூபாய்கள் வரை இருக்கலாம் என நம்புகிறேன்.
அதுசரி வடக்கில் எ‌த்தனை விரிவுரையாளர்கள் கார் வைத்திருக்கிறார்கள்? அவர்களுக்கு வழங்கப்பட்ட கார் பெர்மிற்கள் எத்தனை கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது? யாருக்காவது தெரியுமா?
5 லட்சம் சம்பளம் பெறும் ஒரு பேராசிரியருக்கும் 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் ஆசிரியருக்கும் பெரிதாக வித்தியாசம் இருக்க வாய்ப்புகள் இல்லை. கல்வி ரீதியாக சில படிப்புக்களை படித்திருப்பார்களே தவிர சமூகத்தில் இவர்கள் எவரும் பெரிதாக மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. மாறாக 80 ஆயிரம் ரூபாய்கள் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் பலர் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் இவர்களுக்கு ஏன் 5 லட்சங்கள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
1000 விரிவுரையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக இங்கே குறிப்பிடப்படுகிறது. கூடவே பல்கலைக்கழக நிர்வாகம் ஆட்சேர்ப்பு செய்யும் போது தகுதியானவர்களை தவிர்த்துவிட்டு தங்களுக்கு பிடித்தவர்களை உள்ளீர்ப்பதாக இங்கே பேசப்படுகிறது. இந்த நிலையில் எப்படி இவர்கள் தகுதியான கல்வி சமூகத்தை உருவாக்க முடியும்?.
எத்தனை 1st Class எடுத்த ஆங்கிலத்தில் தகுதியான நபர்களை இந்த பல்கலைக்கழகங்கள் தேர்ந்தெடுத்துள்ளன என்ற கேள்வி வைக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டில் இவர்களை தங்கத் தட்டில் வைத்துத் தாங்க மாட்டார்கள்.
மேலை நாடுகளில் PHD செய்தவர்கள் எத்தனையோ பேர் மகிழ்ச்சியாக ஆசிரியர் வேலையைச் செய்கின்றனர். அவர்கள் தாங்கள் செய்யும் வேலையில் மகிழ்ச்சியாக இருக்கிறோமா என்றுதான் பெரும்பாலும் பார்க்கின்றனர்.
சாதாரண ஆசிரியர் வேலைக்குக் கூட அவர்களை மாணவர்களிற்குக் கற்பிக்கும் போது 3 பேர் அவதானித்து அவர் நன்றாகக் கற்பிக்கிறாரா மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபட வைக்கிறாரா என்று பார்த்துத்தான் தேர்வு செய்வார்கள்; அவர்கள் ஏற்கனவே ஆசிரியராக இருந்தாற் கூட.