புதினங்களின் சங்கமம்

பொழுது போக்க இடமின்றி ஓடித்திரியும் யாழ்ப்பாணத்தான்!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவை அப்படியே இங்கு தந்துள்ளோம்

பண்டிகையை கொண்டாட ஆவது யாழ்ப்பாணத்தாருக்கு ஒரு Entertainment Place வேண்டும்.

விசேட நாளில் கூடி கொண்டாட ஒரு இடம் இல்லாமல் யாழ்ப்பாணத்தான் ஓடி ஓடி திரியிறான்.

ஆ ஊ என்றா பண்ணை கடற்கரை, அதையும் தாண்டி சிறுவர்கள் தொடக்கம் பெரியவர் வரையில் சலிப்பின்றி வைத்திருக்க கூடிய இடம் ஒன்று யாழ்ப்பாணதில் இல்லை, ஒன்றுகூடுவதற்கான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடப்பது குறைவு.

மணிக்கூட்டு கோபுரத்தில் லைட் போட்டு அழகுபடுத்தினதை பார்க்க இன்று சனம் அலை மோதுது, அந்தளவுக்கு Entertainment இடத்துக்கான வரட்சியே உள்ளது.

அனைவரையும் ஒரே இடத்தில் கொண்டடி மகிழ்வதற்கான ஒரு கரியாட்ட திடல் மிக அவசியம், இதற்கான முதலீடுகளை மேற்கொள்ள எவரும் வருவதில்லை, பல வழிகளில் வருமானமீட்டும் முயற்சி.

ரீச்சா எல்லாம் றொம்ப ஒதுக்கமா போயிவிட்டது, அங்கு போய் பார்த்திட்டு வரனும், உணவு இதர சேவைகள் பெற்றால், அந்த விலைக்கு 5 நாளைக்கு வீட்டில உலை வைக்க காசு இல்லாமல் போடும். அவ்வாறான முதலீடுகள் அனைவரும் ஈஸியா கிடைப்பது போல ஏற்படுத்த வேண்டும்.

தடக்கி விழுந்தா சந்திக்கு சந்திக்கு கலியாண மண்டபம் கட்டி காயப்போட்டுட்டு இருக்கும் முதலீட்டாளர்கள் இப்படியான வழிகளில் சிந்தித்தால், பலன் கிட்டும்.