நான் கண்ட ஒரு எளிமையான அமைச்சர் தோழர் சந்திரசேகரன்..
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு நான் தந்துள்ளேன்….
நான் கண்ட ஒரு எளிமையான அமைச்சர் தோழர் சந்திரசேகரன்.. இன்றைய தினம் மக்களின் பிரச்சனை சம்பந்தமாக அரியாலையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்று இருந்தேன். அங்கு ஒருவரை தவிற வேறு யாரும் இல்லை..உள்ளே வாருங்கள் என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது..உள்ளே சென்று பார்த்தால் அமைச்சர் தனியாக அமர்ந்திருந்தார்..அவர் மிகவும் களைத்து போய் இருந்தார்..அவரை பார்க்கும் போது அவர் உடல் நலம் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பது புரிந்தது..சரி தோழர் நீங்கள் ஓய்வெடுங்கள் நான் பிறகு இன்னொரு நாள் வந்து சந்திக்கிறேன் என்று கூறி புறப்பட வெளிகிட்டேன் ஆனால் அமைச்சர் என்னை அமர சொல்லி எனது பிரச்சனைகளை கேட்டு அறிந்து உடனே ஒரு உயர் அரச அதிகாரிக்கு தொலைபேசி அழைப்பெடுத்து எனது பிரச்சனை சம்பந்தமாக கதைத்து அவரை போய் சந்திக்கவும் ஒழுங்கு பண்ணி தந்தார்..நான் வெளியே புறபட தயாராகிய போது இன்னும் பலர் அமைச்சரை சந்திக்க வந்தார்கள் ..தம்மை நம்பி தமது பிரச்சனைகளை கூற வந்தவர்கள் ஏமாந்து போகக்கூடாது என்று அவர்களையும் அழைத்து கதைத்து அவர்களின் பிரச்சனைகளையும் தீர்த்து தருவதாக நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தார்.. எந்த பாதுகாப்புமில்லை..எடுபிடிகள் தொல்லை இல்லை..எந்த பந்தாவுமில்லை..அமைச்சர் என்ற ஆணவமில்லை..வந்தவர்களிடம் எந்தபாகுவாதமும் காட்டவில்லை.. உண்மையான ஒரு மக்கள் சேவகன் தோழர் #சந்திரசேகரம்
#பின்குறிப்பு… இதெ ஒரு தமிழ்த் தேசிய பாராளமன்ற உறுப்பினரை சந்திக்க வேண்டும் என்றால் குறைந்தது ஒரு மாதம் செல்லும்..அதுவும் ஏனோ தானோ என்று ஒரு ஐந்து நிமிஷமே கதைப்பார்கள்..அதைவிட அவர்களின் எடுபிடிகள் தொல்லை..பாதுகாப்பு பிரிவினர் தொல்லை..எம்பி மாரின் பந்தா ..ஆணவத்தை தாண்டியே சந்திக்க வேண்டும்

