புதினங்களின் சங்கமம்

யாழில் ஓ.எல் பெறுபேறு குறைவு!! மாணவி பாணுப்பிரியா துாக்கில் தொங்கி உயிரிழப்பு!!

சமீபத்தில் வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகளில் ஏமாற்றமடைந்த மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பரீட்சை முடிவுகளில் திருப்தியடையாத பெற்றோர் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. வாலைஅம்மன் வீதி அராலி கிழக்கு அராலியைச் சேர்ந்த 17 வயதான சிவகுமார் பாணுப்பிரியா என்ற மாணவி ஒருவர் நேற்று (05) உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின் மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.