புதினங்களின் சங்கமம்

யாழில் 22 வயது சாருஜன் தனிமையில் இருந்த போது தவறான முடிவால் மரணம்!!

யாழ்ப்பாணத்தில் வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.பருத்தித்துறை 4 ஆம் குறுக்குத்தெரு வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய சாருஜன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிறு வயதில் தந்தை பிரிந்து சென்ற நிலையில்இ தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையில் இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்த்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.