புதினங்களின் சங்கமம்

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்த பிறின்ஸ் சொகுசு பேரூந்து, கூலர் வாகனத்துடன் மோதி விபத்து!! வீடியோ

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த சொகுசு பேருந்து விபத்துக்கு உள்ளானதில் சில பயணிகள் காயமடைந்துள்ளனர்.யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு பேருந்தும் , யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கூலர் ரக வாகனமும் , யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்திக்கு அருகில் இன்றைய தினம் சனிக்கிழமை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

அதன்போது கூலர் ரக வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்தில் பயணித்த சிலரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

May be an image of 1 person, road and textMay be an image of 1 person, road and textMay be an image of 2 people, car and textMay be an image of 2 people and textMay be an image of 5 people and textMay be an image of 5 people, ambulance and textMay be an image of ambulance, car and textMay be an image of 1 person, motorcycle, ambulance, car, road and text