திருக்கோவில் பிரதேசத்தில் மாணவன் தனுஷன் தூக்கில் தொங்கி இறப்பு!!
திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இன்று (09) புதன்கிழமை பதிவாகியுள்ளது.தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இம்முறை கணித பிரிவில் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி புள்ளிகளுக்காக காத்திருக்கும் 20 வயதுடைய தனுஷன் இன்றும் மாணவன் தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமையை தொடர்ந்து மாணவனின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

