யாழில் டிப்பர் முதலாளியுடன் கோழி சமைத்து சாப்பிட்ட டிப்பர் றைவரின் மனைவி கணவனிடம் பிடிபட்டது எப்படி?
யாழ் தென்மராட்சிப் பகுதியில் கணவரின் தாக்குதலில் கால்கள் மற்றும் கைகள் முறிவடைந்த நிலையில் 25 வயதான இளம் குடும்பப் பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு கணவனை கைது செய்துள்ளனர்.
கணவரிடம் மேற்கொண்ட விசாரணையில், டிப்பர் சாரதியான கணவர் வெளிமாவட்டங்களுக்கு டிப்பருடன் சென்ற பின்னர் குறித்த டிப்பர் முதலாளி சாரதியின் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டுள்ளார். வீட்டுக்கு வரும் முதலாளிக்கு வீட்டில் வளர்த்து வந்த கோழிகளை பிடித்து விருந்தாக்கியுள்ளார். டிப்பர் சாரதி ஒவ்வொரு தடவையும் வெளி மாவட்டங்களுக்கு சென்று வந்த பின்னர் ஒவ்வொரு கோழியாக காணமல் போவதை அவதானித்து மனைவியிடம் கேட்டுள்ளார். காட்டுப் பூனை வந்து இரவில் கோழியை பிடித்துச் செல்வதாக மனைவி கூறியுள்ளார்.
டிப்பர் சாரதியின் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த முதலாளி கோழியை இறைச்சியாக்கிவிட்டு அதன் எச்சத்தை அருகில் இருந்த வயல் காணிகளில் வீசிவிட்டே சென்றுள்ளார். இதனை அவதானித்த வயல் உரிமையாளர் இது தொடர்பாக டிப்பர் சாரதிக்கு இனிமேல் உனது வீட்டில் கோழி அறுத்துவிட்டு கழிவுகளை இங்கே வீசக்கூடாது கூறி எச்சரித்துள்ளார். இதன் பின்னர் அவரிடம் விளக்கமாக விபரம் கேட்ட டிப்பர் சாரதிக்கு அதன் பின்னரே அரசல் புரசலாக விபரம் புரிந்தது.
வீட்டில் வந்து மனைவி மீது பாய்ந்துள்ளார். மனைவி தொடர்ச்சியாக பொய் சொன்னதால் மனைவி மீது கடும் தாக்குதல் நடாத்தியுள்ளார் டிப்பர் சாரதி. மனைவியை தாக்கிய பின்னர் வீட்டில் இருந்து பல மீற்றர் துாரம் இழுத்து வந்து வீதியில் கிடத்திவிட்டு கணவன் சென்றதாகத் தெரியவருகின்றது. இதன் பின் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்ட மனைவி, கால்கள் மற்றும் கைகளில் வெடிப்பு ஏற்பட்ட நிலையிலும் அடி வயிற்றுப் பகுதியில் கடும் கண்டல் காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் கணவனைக் கைது செய்துள்ளதாகத் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

