புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு வீதியால் சென்ற மாணவிக்கு மயக்கமருந்து தெளித்த இனந்தெரியாதோர்.! மயங்கிய நிலையில் வைத்தியசாலையில்!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலையில் மயங்கிய நிலையில் மாணவி ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (19) காலை புதுக்குடியிருப்பு – ஆனந்தபுரம் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு மாணவி துவிச்சக்கரவண்டியில் வீதியால் சென்று கொண்டிருந்தார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இனம் தெரியாத இருவர் மாணவியின் முகத்தில் ஏதோ ஒரு திரவத்தை விசிறியுள்ளார்கள்.

இதனை பொருட்படுத்தாத மாணவி பாடசாலை சென்றுள்ள நிலையில் பாடசாலையில் மயங்கி வீழ்ந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர்தரம் படிக்கும் 19 வயது கொண்ட பாடசாலை மாணவியே இவ்வாறு மயங்கி விழுந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் மருத்துவ பரிசேதனையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தற்போது பாடசாலை மாணவர்கள் கடத்தல் விவகாரம் பெற்றோரிடம் பேசு பொருளாக காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவ்வறான சம்பவங்கள் உண்மையில் நடைபெற்றதாக என்பது தொடர்பில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.