நெடுந்தீவில் இன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நேர்மையான விசாரணை நடத்தப்படவேண்டுமென்று வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நெடுந்தீவு இறங்குதுறையில் ஒன்றுகூடிய மக்கள் குற்றவாளியை உடனடியாக கைது செய்யுமாறு கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டிருந்தனர்.
விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நொடுந்தீவிற்கு பயணித்திருந்த நிலையில் இவ்வாறு மக்கள் ஒன்றுகூடி வலியுறுத்தியிருந்தனர்.
அத்துடன் நெடுந்தீவின் பாதுகாப்பு எங்கே ..?? கொலைகாரனை உடனடியாக கைது செய் போன்ற பாதாதைகளை தாங்கியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே வேளை பிற்பகல் 2.30 மணியளவில் ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்குப் பயணம் செய்திருந்தனர்.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த குழுவினர் சடலங்களை மீட்கும் பணியினை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த 5 பேரின் சடலங்களும் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படுவதுடன் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நெடுந்தீவில் வெட்டிக் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட அனைவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
கார்த்திகேசு செல்வமணி, அவரது உறவினரைான முல்லைத்தீவு பாண்டியன்குளத்தை சேர்ந்த நாகநாதி பாலசிங்கம், அவரது மனைவி பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை, மகாதேவன், யமுனா ஆகியோருடன், பிரித்தானியாவில் வசிக்கும் பவானியும் உயிரிழந்தனர்.
இவர்களில் கணமணிப்பிள்ளை, பவானி சகோதரிகளாவர்.
பிரேத பரிசோதனைக்காக யாழ் செல்ல இருக்கும் சடலங்கள்.








மக்கள் ஆர்ப்பாட்டம்…








