Home புதினங்களின் சங்கமம் ‘ஐயோ எங்களை மன்னித்து விடுங்கள்’ என்று அனுரா வந்து எங்கள் கால்களில் வீழ்ந்து வணங்கினால் மாத்திரமே...

‘ஐயோ எங்களை மன்னித்து விடுங்கள்’ என்று அனுரா வந்து எங்கள் கால்களில் வீழ்ந்து வணங்கினால் மாத்திரமே செய்வினை நீக்கப்படும்! பலங்கொட கஸ்ஸப தேரர் கூறுகிறார்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக அவர்கள் தம்மிடம் வந்து வணங்கி, மகா சங்கத்தினரின் வல்லமையை ஏற்றுக்கொண்டு, பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினால் மட்டுமே, அவருக்கு பிரித் தீர்த்தம் வழங்கி பிரித் நூல் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பலங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி வந்து,

“ஐயோ, எங்களை மன்னித்து விடுங்கள். மகா சங்கத்தினர் இவ்வளவு சக்திவாய்ந்தவர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை… என் கையால் தவறு நடந்துவிட்டது, ஞானசார தேரரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கிறேன்” என்று கூறினால் மட்டுமே, பிரித் தீர்த்தம் கொடுத்து கையில் பிரித் நூல் கட்டுவதற்குத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் செவ்வாய்க்கிழமை(20) அன்று இரவு இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் நடந்த இடத்தில் ‘மகாசோன் சமயம’ சாந்திபூஜை நிகழ்வு நடைபெற்றது.

மருத்துவ துறையில் மைல்கல் ; டெல்லியில் இருந்து கொழும்பு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை!
மாத்தறையைச் சேர்ந்த பாரம்பரியப் பேயோட்டும் பூசாரிகளால் ‘மகாசோன் பிடெனிய’ நைவேத்தியம் (படையல்) மற்றும் குறியீட்டுச் சடங்காக இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments