வடக்கு மாகாணசபை திறைசேரி உத்தியோகத்தர் நிஜந்தன் திடீர் காய்ச்சலால் மரணம்!!
கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் தலைமைச் செயலக திறைசேரியில் முகாமைத்துவ உத்தியோகத்தராக பணியாற்றிய 36 வயதான ஜெயேந்திரன் நிஜந்தன் திடீரென ஏற்பட்ட காய்ச்சலால் மரணமடைந்துள்ளார். திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்ற போது அங்கு அவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு சென்ற போது அவர் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரியவருகின்றது.

