புதினங்களின் சங்கமம்

காணிப் பிரச்சனையால் வந்த வினை!! சிங்கள விவசாயியின் விதைப் பை அறுத்து எறியப்பட்டது!!

நேற்று பதுளையில் காணிப்பிரச்சினை தொடர்பாக இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவரின் விதைப்பை வெட்டப்பட்டுள்ளது.மடுல்சீ, சூரியகொல்ல பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.இருவருக்கிடையே காணித்தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஒருவர் எதிராளியின் விதைப்பையை வெட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவரது உறவினர்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மடுல்சீம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.