முல்லைத்தீவில் ரியுசனுக்கு சென்ற 14 வயது மாணவிகள் இருவரைக் காணவில்லை!!
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் வசித்துவரும் இரண்டு பதின் அகவை சிறுமிகள் நேற்று 16.03.2022 மாலை கல்வி கற்பதற்காக சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோர்களால் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுமாத்தளன் பகுதியினை சேர்ந்த 14 மற்றும் 15 அகவையுடைய இரு பாடசாலை சிறுமிகள் நேற்று மாலை வீட்டில் இருந்து அம்பலவன் பொக்கணைப்பகுதியில் கல்வி கற்பதற்காக சென்றுள்ளார்கள் அவர்கள் இரவு வரை வீடு திரும்பாத நிலையில் பெற்றோர்கள் தேடியும் காணவில்லை மாலைநேர கல்விக்கும் மாணவிகள் செல்லவில்லை என தெரியவந்துள்ளதை தொடர்ந்து பெற்றோரால் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
17.03.2022 இன்று காலை 9.00 மணிகாகியும் இதுவரை சிறுமிகள் தொhட்பிலான தகவல் கிடைக்காத நிலையில் கிராமத்தவர்கள் சிறுமிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
