புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு வள்ளுவர்புரம் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.(Photos)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குஉட்பட்ட வள்ளுவர்புரம் பகுதியில்எரிவாயு அடுப்புஒன்று இன்று 17.03.2022 காலை வெடித்துள்ளது.

வள்ளுவர்புரத்தில் எரிவாயு அடுப்பினை பயன்படுத்தும் குடும்பம் ஒன்று வழமை போன்று சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இந்த சம்பவம்தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு தகவல்வழங்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டகுடும்பத்தினரிடம் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்கள்.

எரிவாயு வழங்கும் முகவரிடமும் இதுதொடர்பில்தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பம்தெரிவித்துள்ளது.

நாட்டில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலைவிரும்நிலையில் சமையல்எரிவாயு அடுப்புக்கள் ஆங்காங்கே வெடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.