யாழில் இலக்கத்தகடு இல்லாது வந்த வற்றாப்பளை அம்மன் மோதி கொக்குவில் இந்து மாணவியும் தந்தையும் படுகாயம்!! (Photos)
யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் பாடசாலைக்குச் சென்ற மாணவியும் தந்தையும் படுகாயம் அடைந்துள்ளனர்.
இன்று காலை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் தரம் 8B ல் கல்வி கற்கும் ப.சரணிகா என்ற மாணவியும் தகப்பனுமே படுகாயமடைந்துள்ளனர்.
வற்றாப்பளை அம்மன் என பெயர் பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு இல்லாத பேருந்து, மிகவும் பழையது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

