Home Vampan memes கலியாணம், சாமத்தியவீடு, பிறந்தநாள் கொண்டாடுபவர்களே!! போட்டோகிராப்பர்கள் சிலர் கேவலமானவர்கள்!! அவதானமாக இருங்கள்!!

கலியாணம், சாமத்தியவீடு, பிறந்தநாள் கொண்டாடுபவர்களே!! போட்டோகிராப்பர்கள் சிலர் கேவலமானவர்கள்!! அவதானமாக இருங்கள்!!

போட்டோகிராபர்கள் பலர் எனது நண்பர்கள்.
தயவு செய்து சண்டைக்கு வராதீர்கள்.
ஒரு பெண் பிள்ளை குளிக்கிறதை எட்டி பார்த்தால் எட்டி உதைக்கும் சமூக கட்டமைப்புக்குள் வாழும் நாம் தான் , பூப்புனித நீராட்டு விழா என பெண் பிள்ளை குளிக்கிறதை வீடியோ எடுக்க வெளி இளைஞர்களை அழைக்கிறோம்.
அதன் போது பிள்ளையின் ஆடை விடயம் உள்ளிட்ட பலது சுற்றி நிற்கும் உறவுகளின் கண்ணுக்கு தெரியாது. ஆனால் கமரா கண்ணுக்குள் பல விடயங்கள் அகப்படும். (படங்களை சூம் பண்ணினால் சாதாரண கண்ணுக்கு தெரியாதததுக்கள் கூட கமராக்கண்ணுக்கு புலப்படலாம்)
மணவறை மேடையின் கீழ் பெற்றோர்கள் , சகோதர்கள் உற்றார்கள் இருக்கும் போது , இறுக்கி அணையுங்கள் , முத்தம் கொடுங்கள் (இப்ப லிப் கிஸ் எல்லாம் சாதாரணம்) என அவர்களின் கட்டளைக்கு செயற்படுகிறோம்.
ப்ரீ சூட் , அவுட்டிங் என நீர் வீழ்ச்சியில் ஜோடிகளை குளிக்க விட்டு படம் எடுப்பது முதல் வயலுக்குள் உருண்டு விளையாடுவது முதல் பலது …
எடுக்கப்பட்ட படங்களில் சில படங்கள் அப்படி இப்படி அமையலாம், அதனை கொண்டே ஸ்ரூடியோவில் கணனியில் ஏற்றிய பின்னரான பல விடயங்கள் இருக்கு …
இதெல்லாத்தையும் விலாவரியாக , போட்டோகிராபர்கள் தொடர்பில் உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
அப்புறம் முக்கியமான விடயம் :- ஆடைகள் விலகினா கூ(பூ)ர்ந்து பார்ப்பீங்களா ? இதெல்லாம் ஆணாதிக்க சிந்தனை என நினைப்பவர்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்தவும்.
Thanks – FB Post