புதினங்களின் சங்கமம்

வீதிகள், பேரூந்துகளில் செல்லும் இடமெல்லாம் இறக்கும் மக்கள்!! இலங்கையில் கொரோனா அவலம்!! (video)

பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் இருக்கையில் இறந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிப்பு !
ஹொரணையில் இருந்து பாணந்துறைக்கு இன்று மாலை பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது இருக்கையில் இறந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து சந்தேகத்தில் பெண்ணை பேரூந்து நடத்துனர் விசாரித்துள்ளார். எனினும் பின் இறந்துள்ளார் என தெரிந்ததால் பேருந்திலேயே பாணந்துறை மருத்துவமனைக்கு இறந்தவரின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சுமார் 60 அல்லது 65 வயதிற்குட்பட்ட அந்த பெண் பற்றி தமக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.
இதே வேளை வீதிகள், ரயில் நிலையங்கள், வர்த்தகநிலையங்கள் போன்றவற்றில் பலர் இறந்து கிடக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பதிவாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.