நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்த பிள்ளையார் செய்த அலங்கோலம்!!(Photos)
பிள்ளையார் என பெயர் பொறிக்கப்பட்டிருந்த லொறியில் இருந்து மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து கடத்தப்பட்ட 18 கிலோகிராம் மாட்டிறைச்சியுடன் இரு நபர்கள் புங்குடுதீவில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு பாடசாலையொன்றின் திருத்த பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றின் வாகனத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை கடத்திச் செல்லவுள்ளதாக நெடுந்தீவிலிருந்து தீவக சிவில் சமூக உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது .
இதனையடுத்து உடனடியாக கடற்படை மற்றும் ஊர்காவற்துறை பொலிசாருக்கு தீவக சிவில் சமூகத்தினரால் தகவல் வழங்கப்பட்டது . அதற்கமைய புங்குடுதீவு மடத்துவெளி சோதனைசாவடியில் மேற்படி வாகனம் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட நிலையில் இறைச்சி கைப்பற்றப்பட்டதோடு இரு நபர்களும் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.





