யாழ். பருத்தித்துறையில் கிணற்றுக்குள் விழுந்து ஒருவர் பலி!!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பளை பகுதியில் கிணற்றுக்குள் விழுந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை, தும்பளை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.