நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் சுதுமலை புனவேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகியவற்றின்
பிரதம குரு இறைபதமடைந்துள்ளார்.
சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவஶ்ரீ சம்பு மஹேஸ்வரக் குருக்கள் வயது மூப்பின்
காரணமாக இன்று அதிகாலை இயற்கை எய்தியுள்ளார்.
சிவஸ்ரீ சம்புஹேஸ்வரக் குருக்கள்-மீனாம்பாள் அம்மா தம்பதியரின் புதல்வரான மஹேஸ்வரக்
குருக்கள்ஈழத்து சைவ உலகின் பெரும் சொத்து,
சர்வதேச இந்துமத குருபீடத்தின் தலைமகன் என்பது குறிப்பிடத்தக்கது.





