சற்று முன்னதாக 1500 க்கு மேற்பட்ட தொற்று: மொத்த தொற்று ஒரு இலட்சத்து 27 ஆயிரத்தை கடந்தது!
இலங்கையில் சற்று முன்னதாக மேலும் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து மொத்த தொற்று ஒரு இலட்சத்து 27 ஆயிரத்தை கடந்துள்ளது.
இலங்கையில் நேற்றயை நாள் 2 ஆயிரத்து 672 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதன் மூலம் இதுவரையான நாடக்ளில் அதிக தொற்று பதிவான நாளாக அமைந்திருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் முதல்கட்டமாக ஆயிரத்து 581 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் அறிக்கையில் சற்று முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 1,25,906 இல் இருந்து 1,27,487 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

