புதினங்களின் சங்கமம்

மன்னாரில் சிறுவர் இல்லத்தின் மீது இடி தாக்கியது: அதிஸ்ரவசமாக உயிர் தப்பிய சிறுமிகள்! – CCTV Video!

மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள வெற்றியின் நல் நம்பிக்கை இல்லத்தின் மீது நேற்று (7) வெள்ளிக்கிழமை மாலை இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது குறித்த இல்லத்தின் மின் இணைப்புக்கள் முழுமையாக இடி மின்னல் தாக்கத்தினால் எரிந்து சேதமாகி உள்ளது.

சம்பவத்தின் போது குறித்த இல்லத்தில் சிறுமிகள், பாடசாலை மாணவிகள் என 15 பேர் இருந்துள்ளனர்.

எனினும் எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடர்ச்சியாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வந்தது. இந்த நிலையிலே குறித்த இல்லத்தின் மீது இடி-மின்னல் தாக்கி அனார்த்தம் ஏற்பட்டது.

உடனடியாக குறித்த இல்லத்தில் உள்ள சிறுமிகள், பாடசாலை மாணவிகள் வெளியேற்றப்பட்டு அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மின்சார சபைக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த மின்சார சபையினர் மின்சார இணைப்பை துண்டித்தனர்.