புதினங்களின் சங்கமம்

மாங்குளத்தில் வீதியை விட்டு விலகி பற்றைக்குள் ஓடிய பேருந்து!! அதிகாலையில் நேர்ந்த விபரீதம்(Photos)

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஏ9 வீதியில் விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

காலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து அதிகாலை 3.30 மணியளவில் பதிவாகியுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்து வீதி அருகில் உள்ள தனியார் காணி ஊடாக பயணித்துள்ளது.

எனினும் அவ்விபத்தின் போது பயணித்த பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

May be an image of outdoors and treeMay be an image of one or more people, people standing, grass, tree and roadMay be an image of tree and grassMay be an image of tree, grass and roadMay be an image of outdoors and tree