புதினங்களின் சங்கமம்

கொழும்பு – யாழிற்கு பேரூந்தில் வந்த பருத்திதுறை 33 வயது பெண், மகனுக்கு கொரோனா தொற்று!!

33 வயதான தாய்க்கும், 6 வயதான மகனுக்குமே யாழ்.பருத்துறையில் கொரோனா தொற்று
உறுதி..! கொழும்பிலிருந்து பேருந்தில் யாழ்ப்பாணம் வந்தவர்களாம்..

யாழ்.பருத்துறையில் கொரோனா தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் கொழும்பிலிருந்து
பயணிகள் பேருந்தில் யாழ்ப்பாணம் வந்துள்ளமையால் சுகாதார துறையினர் உசர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

33 வயதுடைய தாயுக்கும், 6 வயதுடைய மகனுக்குமே கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.இவர்கள் பஸ் மூலமே பருத்தித்துறை வந்திருந்தினர் என்றும்,

சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்றும்
தெரியவருகின்றது.

அதையடுத்து அந்த பஸ்ஸில் பயணித்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளில் சுகாதாரப்
பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.
பரிசோதனைகளில் 10 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் 5 பேருக்கும், யாழ்ப்பாணம்
மாவட்டத்தில் இருவருக்கும்,

யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.