Home புதினங்களின் சங்கமம் யாழ் மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலன் பயங்கரவாதக் கவிஞரா?? அதிர்ச்சித் தகவல்கள்!!

யாழ் மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலன் பயங்கரவாதக் கவிஞரா?? அதிர்ச்சித் தகவல்கள்!!

யாழ் மாநகரசபை ஆணையாளராக உள்ள கவிஞர் என தன்னைக் கூறி தனக்கு சொந்தமான சமூகவலைத்தளத்திலும் தனக்கு சொந்தமான இணையத்தளத்திலும் கவிஞர்கள் மட்டுமே விளங்கக் கூடியவாறு கவிதைகள் எழுதி ஊடகச்செயற்பாடுகளில் ஈடுபடும் த.ஜெயசீலனும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அவர்களின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி அப்பாவி இளைஞர்கள் பலரை அவர்கள் பக்கம் திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்மையில் யாழ் மாநகரசபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானது தொடர்பாக, ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கினார் என குற்றம் சாட்டி, யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில், தனது ஊழியர் ஒருவரை யாழ் மாநகர ஆணையாளர் முறையிட்டு அச்சுறுத்தியிருந்தார். அந்த அச்சுறுத்தலின் போது, பொலிஸ் அதிகாரிக்கு முன் குறித்த ஊழியர் பயங்கரவாதி எனவும் பயங்கரவாத பிரிவினால் இவருக்கு விசாரணை உள்ளது எனவும் பகீரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.இது தொடர்பாக பொலிஸ் விசாரணை அறிக்கையிலும் இவர் பதிவு செய்துள்ளதாக பொலிஸ்தரப்புக்களிலிருந்து தகவல்கள் ஊடகவியலாளர்கள் சிலருக்கு கசிந்திருந்தது. மாநகரசபை ஆணையாருடன் பாலியல்பலவீனம் மற்றும் தவறான நடத்தைப் பிறழ்வுகளைக் கொண்ட பிரதி ஆணையாளரும் யாழ் பொலிஸ் நிலையத்தில் காணப்பட்டதாக ஊடகத்தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

யாழ் மாநகரசபையின் பிரதிஆணையாளர் சீராளனின் தவறான நடத்தை தொடர்பாக அறிந்தவர்களை சீராளன் பழிவாங்கி வருவதுடன் மாநகரசபை ஆணையாளரையும் தனது வசப்படுத்தி வைத்து பல காரியங்களை அவர் மேற்கொண்டு வருகின்றார்.  வடக்கு மாகாணசபையின் முக்கிய அலுவலகம் ஒன்றில் இரண்டாம் தர அதிகாரியாக உள்ள இளம் பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டே தனக்கு எதிரானவர்களுக்கு பிரதிஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறித்த ஊழியரையும் சீராளன் தனது தனிப்பட்ட நடவடிக்கைகளை அறிந்துள்ளார் என கருதியே கடும் அச்சுறுத்தல் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் குறித்த ஊழியரை பழிவாங்கும் வகையில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் மற்றும் மன உழைச்சலை அவருக்கு வழங்கி வருவதாகவும் அறியமுடிகின்றது.

இவ்வாறான நிலையில் யாழ் மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன்  தொடர்பாக  ஆராய முற்பட்ட போது அவரது தமிழ்த்தேசியத்துக்கு உரம்சேர்க்கும் கவிதைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.

No photo description available.கத

No photo description available.Image may contain: text that says "விசர்நாயும் போரும் வீசர்நாயால் கடியுண்டு... நிர்வெறுக்து நாயைப்போல் புரண்டு, குரைத்து, காண்போரைப் போய்க் கடித்து, துளிநிரை நக்கிக் குடித்து உயிர்விட்ட மனிதனினைப் பார்த்தேன்! மனம் பயுத்தில் உறைந்தது; நாய் எனுஞ்சொல்லைக் கேட்க எனக்குள் நடுங்கியது! வீடுதலை பெற்று வீட்டுக்கு வந்த... அயற் பொடியனினைப் போய்ப்பார்த்தேன் பேர்ந்து கிழிபட்ட நகங்கள், உடலெங்கும் சிகரெட்டின் நக்கல்கள், பற்கள், மலவாசல் குறித்துவாரம் சொன்னான். கிறுகிறுத்துக் குருதி உறைந்ததெ"

Image may contain: text that says "கனவுகளின் எல்லை"Image may contain: text that says "நீ வேறு துப்பாக்கி தூக்கி மரத்திட்ட உன்கைகள் எப்படித்தான் எந்தன் இதயத் துடிப்பறியும்? எவரினையும் எட்டி உதைத்து இழிவு செய்யும் நவீன பூட்ஸ்காலென் நரம்புணர்வையா புரியும்? வயோதிபர் தழந்தையையும் உறுக்கும்நின் வாயா உயீர்ச்சிலீர்ப்பு ஓசைக்கு மதிப்பளிக்கும்? நிதம் கேட்கும் ஷெல்லடிக்குள் பிய்ந்தநின் செவிப்பறையா நானிசைக்கும் மெல்லிசையின் மென்மைகளில் பரவசிக்கும்? பயந்தரண்ட அப்பாவிகளை எரிக்கும் நின் நெற்றிக் கண்ணா கற்பனையை... காதலினைக் கண்டுகொள்ளும்? திமீர்ச் ஊறிக் கிடக்கும் நின் இதயமா தொகுக்கும் கானக் கவிதையுடன் கைகுலுக்கும் கலந்து"Image may contain: text that says "தார் வெய்யிலிலே நன்றாய்ப் பொரிந்து கிடக்கிறது தார் வீதி; பாதம் தனைவைத்தால்.... கொப்புளிக்கும். தாரொட்டிக் கொண்டால் மரணவலி சுட்டுலுப்டு இரப்பர்ச் செருப்பும் இரணமாகச் சுட்டுத்.... எரிவில் எனைக்கடிக்க எட்டி நடக்கின்றேன் உருகிய தாரின் குரூரம் எனைவறுக்கச், செருப்பும் அற, பொரிந்த தாரில் பதம் பொசுங்கி துடித்துப் பதைத்துத் தீமிதித்துப் புண்ணாலே 'ஐம்பத்து எட்டில்' கொதித்த தார்ப் பீப்பாவில் சங்கமித்த தமிழ்மகனின் வலியினிலே கொஞ்சம் அனுபவித்த கொடுப்பினையில்"Image may contain: text that says "புலம்பல் எத்தனைநாள் எதிர்பார்த்துக் காத்தி ருந்தோம்? எத்தனைபேரிடம் தேடி நாமலைந்தோம்? எத்தனையோ துரைகளிடம் நீதி கேட் டோம் எத்தனை ஊர் வலங்களிலே நாம் கரைந்தோம்? எத்தனை நாள் மகஜர்களில் நாம் தொலைந்தோம்? எத்தனை உண் ணாவிரதம் நாமிருந்தோம்? எத்தனை ஆணைக்குழுமுன் நாம் அழுதோம்? இத்தனைக்குப் பின்னுமின்று இடிந்து போனோம்! நேர்த்திவைத்த கோயிலொன்று இரண்டு இல்லை. நினைந்து செய்த பூசைகட்கு அளவே இல்லை. சாத்திரத்தில், மந்திரத்தில், நூலில், மையில் தெய்வவாக்கில், நம்பி நின்றோம்..... பதிலே இல்லை. தேற்றியெமை நாம்நிமிர்த்தி... ஒருநாள் செல்வம் சிறையிருந்து திரும்புமென்றோம்.... நடக்க வில்லை. தோற்றோம் நாம் 'கூற்றுவர்' முன்; வழமை போலே இனியெமக்குத் துயரா நகக்கிழிப்பில் வாசமலர் போனதென்று சேதி எங்களது 'இனிமைகளின்' இறப்புக்"

ஜெயசீலனின் கவிதைப் புத்தகங்கள்  இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கவிதைக் குறியீட்டு மொழிகளில் ஏராளமான கருத்துக்கள் காணப்படுவதும்  அவற்றை வாசித்து வீறு கொண்டே தமிழ்இளைஞர்கள் தவறான பாதையில் சென்றுள்ளதாகவும் கருதலாம்.

அத்துடன் ஜெயசீலன் விடுதலைப்புலிகளின் ஆஸ்தான கவிஞனாக இருந்த புதுவை இரத்தினதுரையால் வெளியிடப்பட்டுவந்த வெளிச்சம் மாதாந்த பத்திரிகைக்கு எழுதிய பெருமளவான கவிதைகள் தமிழ் இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்றது. அந்த கவிதைகள் எம்மிடம் உள்ளது.

புதுவை இரத்தினதுரை கவிதைக்குறியீட்டு மொழிகளில்்.  இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான வீராவேச செயற்பாடுகளை எவ்வாறு தமிழ்இளைஞர்களின் மனத்தில் விதைத்தாரோ அதே வழியில் யாழ் மாநகரசபை ஆணையாளரும் செயற்பட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் முக்கிய அரச இயங்திரத்தின் நிறைவேற்று தர அதிகாரியாக காணப்படும் ஆணையாளர் ஜெயசீலன் இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள துாண்டும் கவிதைக் குறியீட்டு வரிகளில் இலங்கை ஜெனநாயகக் குடியரசிற்கு பாரிய ஆபத்தை மேற்கொள்ள முற்பட்டிருப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. அப்பாவி இளைஞர்களை உசுப்பேற்றி அவர்களை பலிக்கடாவாக்கிவிட்டு தாங்கள் மட்டும் தப்பித்துக் கொள்ளும் செயற்பாடுகளை கவிஞரைப் போல் உள்ள சிலர் செய்துள்ளார்கள். செய்து வருகின்றார்கள்.

ஆகவே  ஜெயசீலனால் பயங்கரவாதி என பொலிசார் முன் குற்றம்சாட்டப்பட்ட அலுவர் கூட இலங்கை ஜனநாயககுடியரசுக்கு எதிராக செயற்பட்ட ஜெயசீலனின் இந்த கவிதைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வட மாகாணத்தில் உள்ள ஒரு சில அதிகாரத்தரப்புக்கள் தங்களது அதிகாரத்தை வைத்து தமக்கு கீழ் உள்ளவர்களை அடிமைகள் என எண்ணி அவர்களை நினைத்த மாத்திரத்தில் ஆட்டிப்படைக்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்களே தவிர தமக்கு கீழ் உள்ள ஆற்றல் மிக்கவர்களை கொண்டு இலங்கை ஜனநாயக அரசிற்கும் மக்களுக்கு என்ன என்ன பணிகளை சிறப்பாக முன்னெடுக்கலாம் என்பதை மறந்து செயற்படுகின்றார்கள் என வடமாகாண அமைச்சில் உள்ள முக்கிய அதிகாரி கவலை தெரிவித்துள்ளார்.