புதினங்களின் சங்கமம்

யாழ் வடமராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் உட்பட்ட 3 பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு சற்று முன்னதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தகவலை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

இரண்டு பெண்களும் ஒரு சிறுவனும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.