புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம்; வெற்றி பெறப் போகும் கட்சிகளின் ஆசனங்களின் எண்ணிக்கை இதுதான்?

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு இலட்சத்து பத்தாயிரத்தை அண்மித்த வாக்குகளையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 70 ஆயிரம் வாக்குகளையும் பொதுஜன முன்னணி 65 ஆயிரத்தை அண்மித்த வாக்குகளையும் பெற்றால் கிடைக்கக்கூடிய ஆசனங்கள் தொடர்பில் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில்

முதல் இரண்டு ஆசனங்களும் மேலதிக ஆசனம் ஒன்றுமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03 ஆசனங்களைப் பெறக்கூடும்.

அதேபோல இரண்டாம் நிலையில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும் அதனைத் தொடர்ந்து காணப்படக்கூடிய பொதுஜன முன்னணி ஒரு ஆசனத்தையும் பெறும் நிலை ஏற்படும்.

இரண்டாம் சுற்றில் கூடுதலாக காணப்படக்கூடிய ஈபிடிபி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படலாம் என்கின்றனர் அரசியல் அவதானிகள்