Home புதினங்களின் சங்கமம் கணவருடன் கள்ளத்தொடர்பு; நடுரோட்டில் 23 வயது யுவதிக்கு சாணி ஊற்றி விளக்குமாறால் அடி! Video

கணவருடன் கள்ளத்தொடர்பு; நடுரோட்டில் 23 வயது யுவதிக்கு சாணி ஊற்றி விளக்குமாறால் அடி! Video

தமிழகத்தின் காரைக்குடியில் இளம்பெண் மீது சாணி ஊற்றி, துடைப்பத்தால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்க்களில் வைரலான நிலையில், சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, காரைக்குடியில் 23 வயதான யுவதி ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞனை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

திருமணத்தின் பின்னர் இன்ஸ்டாகிராம் பிரபலமான அந்த இளைஞன் வெறொரு யுவதியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனையறிந்த மனைவி, கணவருடன் முரண் பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து கணவருடன் தொடர்பில் இருந்த யுவதியை நடுரோட்டில் வைத்து , தன் சகோதரி மற்றும் நண்பியுடன் சேர்ந்து கடும் தாக்குதல் நடத்தியதுடன், இளம்பெண் மீது சாணி ஊற்றி, துடைப்பத்தால் தாக்கியுள்ளனர்.

இந் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில், தாக்குதலுக்குள்ளான பெண் பொலிஸில் முறைப்பாடு அளித்த நிலையில் 3 பெண்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

இந் நிலையில் கள்ளத்தொடர்பு கரணமாக நடுரோட்டில் இளம் பெண் தாக்கப்பட்டம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments