யாழ் சாவகச்சேரிப் பற்றைக்குள் மர்மமாக நின்ற மோட்டார் சைக்கிள் மீட்பு!!
சாவகச்சேரி டச் மருதடி சந்திபகுதியில் உள்ள பற்றைக்காணி ஒன்றுக்குள் மறைத்து விடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை விழிப்புக் குழுவினர் சாவகச்சேரி பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் குறித்த பகுதியில் ஆள் நடமாட்டம் காணப்பட்டது. விழிப்புக் குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது பற்றைக்காணிக்குள் டிஸ்கவரி மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.களவு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நோக்கில் குறித்த மோட்டார் சைக்கிள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகப்படுகின்றனர். மீட்க்கப்பட்ட மோட்டார் சைக்கிள் சாவகச்சேரி விசேட புலனாய்வுப் பிரிவினரிடம் கையளித்து இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

