கனடாவின் டொரோண்டோ பகுதியில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக டொரோண்டோ பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 23ம் திகதி முதல் இந்த நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர். 28 வயதான அரூரன் ஸ்ரீதரன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடைசியாக ஜூலை 23, 2020 வியாழக்கிழமை இரவு 12 மணிக்கு போர்ட் யூனியன் சாலை மற்றும் லாரன்ஸ் அவென்யூ கிழக்கு பகுதியில் காணப்பட்டார் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது அடையாளம் பற்றி தெரிவித்த டொரோண்டோ போலீஸ், சாதாரண உடல்வாகு கொண்டவர் எனவும் முகச்சவரம் செய்யாது இருந்தார் எனவும்
பழுப்பு நிற கண்களையுடையவர் எனவும் தெரிவிக்கபடுகின்ற அதேவேளை அவர் இறுதியாக அணிந்திருந்த ஆடைகள் பற்றிய விடயங்கள் பற்றி குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரூரன் ஸ்ரீதரன் தொடர்பான விபரங்கள் தொடர்பில் அறிந்தால் 416-808-4300 , மற்றும் 416-222-TIPS (8477) இந்த இலக்கத்திற்கு அல்லது www.222tips.com என்ற இணையத்தளத்தின் ஊடாடக தகவலை அறிவிக்குமாறு டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தொடர்புகளுக்கு
http://torontopolice.on.ca/newsreleases/47670





