கைது செய்த பொலிஸாரை தலைசுற்று வைத்த கஞ்சா டீலர்!! மன்னாரில் நடந்தது என்ன?
மன்னார் – சின்னக்கருசல் பகுதியில் பொலிஸார் நடத்திய விசேட தேடுதலின் போது கைது செய்யப்பட்ட 32 வயதான நபரிடம் விசாரணை செய்த போது கிடைத்த தகவல் பொலிஸாரை தலைசுற்றவைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட போது குறித்த நபரிடம் இருந்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான 6 கிலோ 90 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளை மீட்கப்பட்டன.
இருப்பினும் அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது மன்னார் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 கிலோ 325 கிராம் கேராளா கஞ்சா நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா அனைத்தும் மேலதிக விசாரணையின் பின் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்க மேற்கொள்ளபட்டுள்ளது.
சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

