யாழ் தையிட்டியைச் சேர்ந்த சிறுவன் இராணுவத்துக்கு செய்த செயல்!! (photos)
தையிட்டி கிழக்கு j/247 பிரிவை சேர்ந்த
மரியசீலன் சோபிதன் கடந்த 15/07/2020 அன்று தல்சவன கோட்டல் முன்பாக கண்டு எடுத்த பேசினை கோட்டல் நிர்வாகத்திடம் கையளிக்க சென்றிருந்த போது அவர்கள் அதனை ஏற்க தாமதித்து உள்ளனர்.
அந்த சமயம் பேசினை தவறவிட்ட இராணுவ வீரர் அங்கு வந்துள்ளார். பேசினையும் பெற்றுக்கொண்டார்.
நேர்மைக்கு தனது பாராட்டுக்களை வழங்கி உள்ளார்.
தவறவிட்ட பேசில் 43000/- காசு மற்றும் முக்கிய ஆவணங்களும் இருந்தது குறிப்பிட தக்கது.
இன்று 21/07/2020 சோபிதனை நேரில் காண நேரிட்ட இராணுவ வீரர் தனது நன்றியை கடிதமாக எழுதி வீட்டில் காட்டும்படி கொடுத்துள்ளார்.
பரிசாக சொக்லெட்களும் வாங்கி கொடுத்துள்ளார்.
சோபிதனின் நேர்மையை பாராட்டலாமே.


